2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சி

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு, வவுனியா பேராறு நீர்த்தேக்க பகுதியில் இன்று (31)  நடைபெற்றது.

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் நிறைவேற்றப்படுகின்ற வட மாகாணத்தில் நீரேந்து பிரதேசங்களை பாதுகாப்பதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாகவே, குறித்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.

இதன்போது, வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் நீரேந்துப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், பேராறு நீர்த்தேக்கத்தின் நீரேந்துப் பகுதிகளில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், அமைச்சின் இணைப்புச் செயலாளர் சங்கரலிங்கம், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X