2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீர் வழங்கல் சபை செயற்பாட்டால் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வவுனியா - மன்னார் வீதியில், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வெட்டப்பட்ட குழியால், குறித்த வழிக்கான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

வவுனியா பிரதேசத்தில், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வீதியோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு, நீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், நேற்று (15) இரவு, குளுமாட்டுச் சந்திக்கு அண்மையில், வவுனியா - மன்னார் வீதிக்குக் குறுக்காக, குழாய் பொருத்துவதற்காக பாரிய குழி தோண்டப்பட்டது. 

இவ்வாறு தோண்டப்பட்ட குழி, இன்று (16) காலை வரை மூடப்படாதுள்ளது. இதனால், அவ்வழியே போக்குவரத்தை மேற்கொள்ளும் பயணிகள், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். 

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குழாய் பொருத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டிய நிலையிலும், மாற்று வீதி தொடர்பான தெளிவூட்டல்கள் குறித்துச் சீரான முறையில் தெளிவுபடுத்தப்படாத நிலையிலுமே, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, குறித்த பணிகளை முன்னெடுத்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .