2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நீர்வேலியில் விபத்து

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனமொன்று நீர்வேலிப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில், இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்ததுடன், தீயணைப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக, இன்று (16) பிற்பகல் 2 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அரியரட்ணம் சகாயராஜா (வயது – 34) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அவ்விடத்துக்குச் செல்லும் போது, தீயணைப்பு வாகனத்தின் முன் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால், வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி அருகில் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதென, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .