2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நுண்கடனுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்பாட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 30 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், நாடு பூராகவும் 28 இலட்சம் பெண்கள் நுண்நிதி கம்பனிகளின் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் நிம்மதியை இழந்து, நித்திரையை இழந்து தவிக்கும் தமது பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .