2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

குறைந்த வருமானத்தை கொண்ட நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள், கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, மல்லாவி, பூநகரி, விசுவமடு பிரதேசங்களை சேர்ந்த  தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு  புத்தக பை, பயிற்சி கொப்பிகள் தண்ணீர் போத்தில், என்பற்றோடு,  காலணி கொள்வனவு செய்வதற்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி, இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில்,  கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித்  காரியகரவன  மற்றும் பாடசாலைகளின் அதிபா்கள் ஆசிரியர்கள் மாணவா்கள்  ஆகியோர்கள் கலந்துகொண்டனா்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .