2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நூலகத்துக்கான மின்சாரம் துண்டிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் இயங்கும் புதுக்குடியிருப்பு கிளை நூலகத்துக்கான மின்சாரம், மின்சார சபையினரால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த இரண்டு வாரங்களாக மின்சார இணைப்பு இல்லாத நிலையில், நூலகம் காணப்படுவதாக, வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட மின்சார சபையிடம் வினவியபோது, அதற்கு பதிலளித்த சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, குறித்த காலப்பகுதிக்குரிய மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதன் காரணத்தாலேயே, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .