2025 மே 15, வியாழக்கிழமை

நூல்கள் வழங்கல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களான எஸ்.சேரலாதன், ரிசானி சேரலாதன் ஆகியோரினால் அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அக்கராயன் மகா வித்தியாலத்தின் நூலகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பாடசாலையின் முதல்வர் க.மதுரநாயகம் தற்போது இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ள நிலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களான பாடசாலை நூலகத்துக்கு நூல்கள் வழங்கப்பட்டுள்ளமை பேருதவியாக அமைந்துள்ளது.

கிளிநொச்சி மேற்கில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, வர்த்தக, கலை வகுப்புகளைக் கொண்ட முக்கிய பாடசாலையாக இப்பாடசாலை விளங்கும் நிலையில் இப்பாடசாலைக்கு கூடுதலான நூல்கள் அன்பளிப்பாக எதிர்பார்க்கப்படுவாக, பாடசாலை நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .