2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நெத்தலியாற்றில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகள்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லையாகக் காணப்படுகின்ற நெத்தலியாற்றுக் கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால் அயலில் உள்ள தமது கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும், பிரதேச மக்கள்  கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் எல்லையோரத்தில் காணப்படுகின்றதும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச எல்லையோரத்தையும் பிரிக்கின்ற நெத்தலியாற்றுப்பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

அதாவது, கசிப்பு உற்பத்தி போன்ற  சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதனால், தங்களுடைய கிராமங்களில் புதியவர்களின் நடமாட்டம், திருட்டுச் சம்பவங்களுடன் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள், இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .