Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயன் குடிநீர்த் திட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் அக்கராயன் பொது அமைப்புகள் தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்டம் ஊடாக, 433 குடும்பங்களுக்கான குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரைப் பெற்று வந்த நிலையில் குடிநீர் பெறப்பட்ட கிணறு முற்றாக நீர் வற்றியதன் காரணமாக குடிநீர் வழங்கலில் கடந்த ஒரு மாத காலமாக நெருக்கடி காணப்படுகின்றது.
அக்கராயன் குளம் திறந்து விடப்பட்டுள்ள போதிலும் குடிநீர்க் கிணற்றின் நீர் மட்டம் உயரவில்லை. இந்நிலையில் குறித்த குடிநீர்த் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கராயன் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏற்கெனவே, அக்கராயனில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்ட சென்றமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
3 hours ago