2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘நெற் செய்கை காணிகளை பகிர்ந்தளிக்கவும்’

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள 400 ஏக்கர் வரையான நெற் செய்கை காணிகள், இதுவரை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் காணப்படுவதாகவும் அதனை பகிர்ந்தளிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

குறித்த வயல் காணிகளை, இங்குள்ள மக்களுக்கு வழங்குமாறு, இப்பகுதி விவசாயிகள் பல தடவை கோரிக்கை விடுத்துள்ளபோதும், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.   

இதனை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, மாவட்ட செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரிடம் இப்பகுதி மக்கள், விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருவதுடன், பல தடவைகள் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.  

எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .