Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - துணுக்காய் அம்பலப்பெருமாள்குளத்துக்கான சிறுபோக நெற்செய்கைக் கூட்டம், இன்று நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் த.நந்தசீலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் கை.பிரகாஸ், துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.பிரபாகரன், கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர் கே.ரி.சீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இவ்வாண்டு காலபோகத்தில் 270 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
அம்பலப்பெருமாள்குளத்தின் இன்றைய நீர் மட்டம் 08 அடி 07 அங்குலமாகக் காணப்படுகின்றது. கால்நடைக் கட்டுப்பாடு வாய்க்கால்களைத் துப்புரவு செய்தல், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago