2025 மே 22, வியாழக்கிழமை

‘ நேர்முகத்தேர்வில் முறைக்கேடு’

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக, இலங்கை ஜனரஜ பொது சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பீரிஸ் சர்னபாலா தெரிவித்துள்ளார்.

வவுனியா சுதேசிய சிறு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுகாதாரத் தொண்டர்களாக தம்மை பதிவு செய்து கொண்டவர்கள், 820 பேர். இவர்களுக்கான நியமனத்தை வழங்குமாறு முன்னாள் ஆளுநர் அரச தலைவர் செயலாளர் ஆகியோர் அறிவித்துள்ள நிலையில் தற்போது இடம்பெற்றுள்ள நேர்முகத் தேர்வின்போது 3,000க்கும் அதிகமானவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

எனவே, குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக நாம் நம்புகின்றோம். யுத்த காலத்தில் சுகாதார சேவைகள் என்பது, முக்கியமானதும் அத்தியாவசியமான சேவையாகவும் இருந்தது. வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் பாரிய தேவைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக, இது காணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X