2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த காட்டுயானை

Freelancer   / 2021 ஜூலை 17 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பிரிவில், பெரியகுளம் வயல் வெளியில் நோய்வாய்ப்பட்டிருந்த காட்டுயானை இன்று (17) உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் காட்டுயானை ஒன்று நோய்வாய்ப்பட்டு வயல்வெளியில் வீழ்ந்து கிடப்பது தொடர்பில், பொதுமக்களால் முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியரும், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோத்தர்களும் நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை வழங்கியிருந்தனர். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யானை இன்று உயிரிழந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X