Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலை செல்லாத மற்றும் இடைவிலகிய நிலையில் காணப்படும் மாணவர்களை, மீள இணைக்கும் செற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை செல்லாத மற்றும் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் தொகை கடந்த காலங்களில் அதிகளவாக காணப்பட்டன. கடந்த மாதங்களில் 678 சிறுவர்கள் இவ்வாறு காணப்பட்டனர்.
மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் கிராம அமைப்புக்கள் இணைந்து கடந்த மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 135 சிறுவர்கள், பாடசாலைகளிலும் சிறுவர் இல்லங்களிலும் நன்னடத்தைப் பாடசாலைகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.
பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவோ அல்லது ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவோ மாவட்டச் செயலகம் அல்லது சிறுவர் நன்னடத்தை திணைக்களம் அல்லது சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றுடன் தொடர்பு கொண்டு சிறார்களை மீளக்கற்றலில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலைகளை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட அல்லது பாடசாலை செல்லாத சிறுவர்களை வைத்திருக்கும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வந்தமை மற்றும் சிறுவர்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தியிருந்தமை என்பன கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக நடவடிக்கை எடுக்கப்;பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
2 hours ago