2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

George   / 2015 நவம்பர் 13 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு  நிறுவனத்தினால், மன்னார் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையில் கல்வி கற்கும்  250 மாணவர்களுக்கு, 4 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாதணிகளும் புத்தகப்பைகளும் இலவசமாக நேற்று வியாழக்கிழமை(12) பகிர்ந்தளிக்கப்பட்டன.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமமே மடுக்கரை. இக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக இலண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனமாக இலங்கையில் செயற்பட்டுவரும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை ஊடாக 250 புத்தகப்பைகளும் 250 பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் சேவையாளர்களாகிய ப. சுபாஸ்கரன், சி.சிவகாந்தன், கோ.ரூபகாந், மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X