2025 ஜூலை 05, சனிக்கிழமை

போதை தேடிய 231 பேர் கைது

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் இருந்து  6 மாதம் 30ஆம் திகதிவரை வரையான ஆறுமாத காலப்பகுதியில் மதுவுடன் தொடர்புடைய 231 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், 226 வழக்குகளின்  அபராதத் தொகையாக 1,416,600 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கைது செய்யப்பட்ட 3 பேர்,  கசிப்பு வைத்திருந்த 53 பேர், கோடா வைத்திருந்தவர், கசிப்பு உற்பத்தி உபகரணங்களை வைத்திருந்தவர், அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம்  விற்ற  5 பேர், கள் விற்ற  91பேர், அளவுக்கு மீறி கள் வைத்திருந்த் 35 பேர், கஞ்சா வைத்திருந்தவர், இருபத்தொரு வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட்  விற்ற  41 பேர் என மொத்தமாக 231 பேர்  கைதுசெய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றில் இவர்கள் ஆஜர்செய்யப்பட்டதுடன் 226 வழக்குகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .