2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பூநகரி பிரதேச செயலக கட்டடப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

இடைநிறுத்தப்பட்டிருந்த பூநகரி பிரதேச செயலகத்துக்கான நிரந்தர கட்டடம் அமைக்கும் பணிகள், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பூநகரி வாடியடி சந்திப்பகுதியில் பூநகரிப் பிரதேச செயலகத்துக்கான நிரந்தர கட்டடம் அமைக்கும் பணிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் அதற்கான நிதி திறைசேரிக்குத் திரும்பிச் சென்றமையால், கட்டடப் பணிகள் கைவிடப்பட்டன.

தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து 15 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றது. 

இதனையடுத்து தற்போது இக்கட்டடப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X