Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களை இலக்கு வைத்து நிதி நிறுவனங்கள் அதிகூடிய வட்டி வீதங்களில் கடன்களை வழங்கி, அவற்றை அறவிட்டு வருவதனால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறியக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்ளை எதிர்நோக்கி வருகின்றன.
குறைந்த வருமானம் பெறும் வறியக் குடும்பங்கள், பெற்றுக் கொண்ட கடனை மீளச்செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் இதன்காரணமாக குடும்பங்களில் பிணக்குகளும் ஏற்படுகின்றன.
மாந்தை கிழக்கு பிரதேசச் செயலகப் பிரிவின் சிறாட்டிகுளம், பனங்காமம், துணுக்காய், கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், ஐயன்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலகப் பிரிவில் கற்சிலைமடு, மேழிவளம் போன்ற பகுதிகளிலும் இவ்வாறான கடன்கள் வழங்கப்பட்டு, மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
06 Jul 2025