Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53 ஆவது நாளாக போராடிவருகின்றனர்.
ஆனால், இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில், இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது
இந்நிலையில், கோயில்குடியிருப்பு மாதர் சங்கத்தினர் இம்மக்களுக்கு ஆதரவாக இன்று வருகைதந்து அவர்களுக்கு ஆதரவு வழங்கினர்.
இங்கு கருத்து வெளியிட்ட கோயில்குடியிருப்பு மாதர் சங்கத்தின் தலைவி,
“இன்று ஒரு நாள் இந்த தகரகொட்டகையில் இருக்கும்போது அவர்களின் வேதனை புரிகிறது. இந்த வீதிவழியாக செல்கின்ற போது, இந்த உறவுகளை நினைக்கும் போது, எமது இரத்தம் கொதித்தது. அந்தவகையிலேயே, இன்று இவர்களுடன் ஆதரவு வழங்கி இந்த போராடத்தில் கலந்து கொண்டுள்ளோம்.
ஏனைய அமைப்புகள் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளும் இணைந்து இம்மக்களின் தீர்வுக்காக போராடவேண்டும்” என கோரினார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago