2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் மீது தாக்குதல்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்  நடத்திய  குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்ற  நபரை  எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி  கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப்  பகுதியில்  பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின்போது, கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்  நடத்திய  குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, கடந்த மாதம்  31ஆம் திகதி, அடையாள அணிவகுப்புக்கு  காயமடைந்த  பொலிஸ் உத்தியோகத்தர்  சமூகமளிக்காத  நிலையில, சந்தேகநபர்,  நேற்று 4ஆம் திகதிவரை விளக்கமறியலில வைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்றையதினமும் காயமடைந்த  பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத  நிலையில், சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .