க. அகரன் / 2018 மார்ச் 09 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்ணையும் நேற்று கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குழந்தையை பிரசவித்த பெண்ணையும் குழந்தையை விற்பனை செய்வதுக்கு இடைத்தரகராக செயற்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தையை விற்பனை செய்த பெண் ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை பெற்று 1 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago