2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

படைப்புழுத் தாக்கத்தால் 40 ஏக்கர் சேதம்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், படைப்புழு தாக்கத்தால், 40 ஏக்கர் வரையான சோளச்செய்கை அழிவடைந்திருப்பதாக, வடமாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன், இன்று (07) தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், படைப்புழுவின் தாக்கம் கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிகளவில் உணரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்தாண்டு, அம்பாறை மாவட்டத்தில், படைப்புழு தாக்கம் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைபபள்ளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே, படைப்புழு தாக்கத்தால் அதிகளிவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக, பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலேயே, அதிகளவு தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த பெரும்போகத்தின் போது 240 ஏக்கர் சோளச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவித்ததடன், இந்நிலையில், படைப்புழுவின் தாக்கத்தால் 40 ஏக்கர் சோளச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருவையாறு, செல்வநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டுத்தோட்டச் செய்கைகளிலும், படைப்புழுவினுடைய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகள், பயிர் சிகிச்சை முகாம்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .