2025 மே 09, வெள்ளிக்கிழமை

’படையினர் மத்தியில் ஆரோக்கியத்தை உறுதிபடுத்த வேண்டும்’

Niroshini   / 2021 ஜூலை 14 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கொவிட் - 19  பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான  தேசிய பொறுப்பை நிறைவேற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள படையினர் மத்தியில், ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டுமென்று,  கிளிநொச்சி மாவட்டப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, 573ஆவது பிரிகேட் மற்றும் அதன் கீழுள்ள கட்டளை அலகுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, படையினர் மத்தியில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொழில் வாழ்க்கையின் போது பல்வேறு தொழில்முறை பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எல்லா நேரங்களிலும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X