2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பட்டா வாகனமும் உழவு இயந்திரமும் மோதி விபத்து

Freelancer   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு  பரந்தன் வீதியில் சுதந்திரபுரம் பகுதியில் பட்டா வாகனமும் உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உழவு  இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் பட்டா வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து தொடர்பில், புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் சாரதியினை கைது செய்துள்ளார்கள், மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .