Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
அடங்காப்பற்று வன்னி இராச்சியத்தினை இறுத்தியாக ஆண்ட பண்டாரவன்னியன், முல்லைத்தீவில் பிரித்தானியரின் கோட்டையை தகர்த்து வெற்றிகொண்டநாள், நேற்று வியாழக்கிழமை (25) வவுனியா பண்டாரவன்னியன் சிலையருகில் அனுஷ்டிக்கப்பட்டது.
பண்டாரவன்னியன், முல்லைத்தீவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட கோட்டையைத் தகர்த்து வெற்றி கொண்ட நாளின் 213ஆவது ஆண்டு நினைவு தினத்தை, வவுனியா பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலகார் கா.உதயராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago