2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பணிக்குச் செல்லமுடியாது அரச உத்தியோகத்தர்கள் அவதி

Niroshini   / 2021 மே 19 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளி பிரதேசங்களான ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பணிக்குச் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஒருசில அரச உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு நகர் பகுதியிலேயே பல திணைக்களங்களின் தலைமைப் பணிமனைகள் மற்றும் அலுவலகங்கள், வடமாகணப் பணிமனையின் அலுவலகங்கள் என்பன காணப்படுகின்றன. இவற்றில் பணியாற்றச் செல்லும் போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எல்லைப்பகுதிகளில் உள்ள வீதிகளில் காவல் கடமையில் நிக்கும் படையினர் தடை வித்துள்ளனர்.

பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்களை தவிர வேறு எந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தல் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

திணைக்களங்கள், அலுவலகங்களிளன் தலைமை பணிமனையினர், தங்களை பணிக்குச் செல்லுமாறு அறிவுறுத்துவதாகவும், அந்த அறிவுறுத்தலுக்கமைய தாங்கள் பணிக்குச் சென்று திரும்பி வீடு திரும்பியுள்ளதாக, பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .