2025 மே 15, வியாழக்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பும் கண்டனப் போராட்டமும்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

இலங்கை போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்களால், இன்று (16) காலை, பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், மன்னார் பஸார் பகுதியில் காலை 9 மணியளவில், கண்டனப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில், அரச போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்காக, மன்னார் நகர சபையால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம், எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி, நேற்று  (15) இரவு மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பும் கண்டனப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன

இதனால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். எனினும், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டன.

இவ்விகாரம் தொடர்பில் வினவுவதற்கு, மன்னார் நகர தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .