Princiya Dixci / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி மு.உமாசங்கர், இன்று (08) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் .
இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாகத்துறையில் பட்டமேற்படிப்பு நிர்வாகக் கலாநிதி கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, தற்போது வெளிநாட்டு மேற்படிப்பை சிங்கப்பூரில் முடித்து, கடந்த மாதம் மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.
இவரை, தற்போது மருத்துவ நிர்வாகியாக மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்கும் படி நேற்று (07) மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரனால் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம், வைத்திய கலாநிதி மு.உமாசங்கர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
15 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Nov 2025