2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘பம்பைமடுவில் கழிவுகளை கொட்ட வேண்டாம்’

க. அகரன்   / 2019 ஜனவரி 29 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் இன்று (29) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக குப்பைகளை கொட்ட முடியாமையால் நகரசபை குப்பை ஏற்றிய வாகனங்கள் குப்பைகளை கொட்ட அனுமதிக்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ-9 வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் நகரசபை தவிசாளர், பிரதேசசபை தலைவர், உறுப்பினர்கள் மாவட்டச் செயலருடன் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை கருத்துத் தெரிவித்த வவுனியா பிரதேச சபை தலைவர், குறித்த குப்பை மேடு நீண்ட காலமாக உள்ளது. அதனை தெரிந்தே இப்பகுதியில் அரசியல் செல்வாக்கால் வீடுகளை அமைத்திருந்தனர். அவை சட்ட விரோதமான வீடுகள். அதற்காக குப்பை மேட்டை அகற்ற முடியாது. குப்பைகளைக் கொட்ட வேறு இடங்கள் இல்லை. திடீரென குப்பைகளை கொட்டவேண்டாம் என தெரிவித்தால் என்ன செய்வது என தெரிவித்தார்.

இதேவேளை குப்பைகளை கொட்டுவதுக்கு இடையூறாக உள்ளோருக்கு எதிராக வவுனியா நகரசபை தலைவர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை முதல் அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நகரசபை ஊழியர்கள் வீதியை மறித்து மேற்கொள்ளும் போராட்டத்தைக் கைவிடுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .