Editorial / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
கிளைமோர் குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு, வவுனியா நீதிமன்றம், நேற்று (07) பிணை வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதியன்று, 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் 9ஆவது சந்தேகநபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில், திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி 8 பேருக்கும் ஆதரவாக சி.எச்.ஆர்.டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது.
இந் நிறுவனத்தின் ஊடாக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபை குறித்த விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7:1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மதக் கடிதம், நீதிமன்றத்துக்கு அனுப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ. கேதீஸ்வரன் ஆஜராகி, குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய தன் பிரகாரம், 8 பேரும், பதில் நீதிபதி க.தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
8 minute ago
23 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
23 minute ago
30 minute ago