2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பயணத் தடை தொடர்பில் படைத்தளபதியிடம் எடுத்துரைப்பு

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், ஊடகவியலாளர்களைப் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட படையினரின் சோதனை நிலையம் தொடர்பில், முல்லைத்தீவு மாவட்டப் படைத்தளபதியிடம், முல்லை ஊடக அமைய தலைவர் எடுத்துரைத்துள்ளார்.

இன்று, முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் உபுல் ராஜபக்ஷ வருகைதந்த நிலையில், இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஏனைய இடங்களில் ஊடகவியலாளர்கள், தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட போதும், முல்லைத்தீவு  - 03ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள வீதிச் சோதனை சாவடியில் வைத்து, முல்லைத்தீவு ஊடகவியலாளர்களை கடமைக்குச் செல்லுவதற்கு படையினர் அனுமதி வழங்காது தடுப்பது குறித்து,  படைத்தளபதி மேஜர் ஜெனரல் உபுல் ராஜபக்ஷவிடம். முல்லை ஊடக அமைய தலைவர் எடுத்துரைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .