2025 மே 22, வியாழக்கிழமை

பயிற்சிப் பட்டறை

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வடமாகாண அரச உத்தியோகத்தர் ஆக்கத்திறன் போட்டிக்கான பயிற்சிப் பட்டறை  மாவட்ட மட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சிப்பட்டறை, நாளை காலை 10 மணி முதல் 12 மணி விரையும் 5 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறுமென, வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி.சி.சுஜீவா தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ளோருக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளோருக்கு டிப்போச் சந்திக்கு அருகிலுள்ள மாவட்டச் செயலகப் பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்திலும், வவுனியா மாவட்டத்திற்கு கோவிற்குளத்திலுள்ள அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

கவிதை, சிறுகதை, பாடலாக்கம், மன்றங்களுக்கிடையிலான கலைத்திறன் போட்டிகளில் பங்குபற்றுவோர், இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மட்ட பண்பாட்டு உத்தியோகத்தர்கள் இப்பயிற்சிப் பட்டறையை வழிநடத்தவுள்ளனர்.

அரச ஊழியர் ஆக்கத்திறன் போட்டிகள் மிக விரைவில் நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் வைத்து வெற்றி பெறுவோருக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படுவது வழக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X