2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பரங்குளம் கிராம மக்களால் மகஜர் கையளிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பரசங்குளம் கிராம மக்களால், வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ.எம்.ஹனீபாவிடம் மகஜர் ஒன்று, நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

பரசங்குளத்தில் உள்ள குளத்தை, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புனரமைத்தது. அப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு, அதன் கீழான காணிகள் பிரித்து  வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு 3 வருடங்கள் கடந்தும், அந்த காணிகள் தமக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அத்துடன், அப்பகுதியில் முன்னர் கடமையாற்றிய கிராமசேவையாளர் ஒருவர் தனது உறவினர்களுக்கும் தனக்கு தெரிந்தவர்களுக்கும்  வெளிபிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் அக்காணிகளை வழங்கியுள்ளார் என்று குற்றம் சுமத்தி, நேற்று முன்தினம், வவுனியா கச்சேரிக்கு முன்பாக, அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருபகுதி மக்களால், மேற்படி குளத்திற்கு கீழ் உள்ள காணியானது தங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டது எனவும் அதற்குரிய உரிய ஆவணங்கள் தங்களிடம் உள்ளது என்றும், இக்காணியில் பல வருடங்களாக தாம் விவசாய செய்கையை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

இதில் எந்த அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தே, இன்று வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ.எம்.ஜனீபாவிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .