2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பரந்தன் வாள்வெட்டு: 2 மணித்தியாலங்கள் கழித்துச் சென்ற பொலிஸார்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஏ-9 வீதி பரந்தன் ஸ்டார் றெஸ்ட்க்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் பற்றி பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119க்கு அறிவித்து, இரண்டு மணித்தியாலங்கள் கழித்தே அவ்விடத்துக்குப் பொலிஸார் சென்றுள்ளார்கள்.

பரந்தன் ஸ்டார் றெஸ்ட்டில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற இரண்டு குழுக்களிடைய நேற்று ஏற்பட்ட தகராறு பெரும் குழப்பமாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது. அதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்படி ஸ்டார் றெஸ்ட்டில் மாலை 3.10 மணியளவில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு குழுவினர் அங்கிருந்து வெளியேறி பரந்தன் சந்திப் பக்கமாகச் சென்று, வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் மேற்படி ஸ்டார் றெஸ்ட் நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அவதானித்தவர்கள், உடனடியாகவே மாலை 3.20 மணியளவில் பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119க்கு அழைத்து அறிவித்து இரண்டு மணித்தியாலம் கடந்தும் அவ்விடத்துக்குப் பொலிஸார் எவரும் செல்லவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .