Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளை மூன்று மாத காலத்துக்குள் பெற்றுத்தருவதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
பரவிப்பாஞ்சான் மக்களின் தொடர் போராட்டம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதிக்கு இணங்க முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடினார். பாதுகாப்பு செயலாளர் வழங்கிய வாக்குறுதிக்கமைய பரவிப்பாஞ்சான் பகுதியில் மேலும் ஒரு பகுதி காணி விடுவிக்கப்படும் எனவும், குறித்த பகுதியில் இருந்து இராணுவம் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர், மக்களின் காணி முழுமையாக கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதாக வெள்ளிக்கிழமை (09) மாலை 5 கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
2 hours ago