2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 3 ½ ஏக்கர் காணி, இன்று புதன்கிழமை (31) விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் 4 ஆவது கட்டமாக இது அமைந்துள்ளது.

காணிகளை விடுவிக்குமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் காரணமாக முதற்கட்டமாக ஒரு தொகுதி காணியும், இரண்டாம் கட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, மூன்றாம் கட்டமாக 3.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலார் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .