Niroshini / 2021 மே 06 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகருக்கும், வவுனியா பொலிஸ் நிலைய பெண் உத்தியோகத்தருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த வவுனியா நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதேவேளை, வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கெப்ரிக்கொல்லாவை பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்று விடுமுறையில் சென்றிருந்தார்.
தற்போது மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில், அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது, அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025