Editorial / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.
நாட்டின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றுக்காலை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து நிகழ்வில் அணிவகுப்பில்கலந்துகொள்ள வந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊர்காவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீரென மய க்கமடைந்து விழுந்தனர். இதனால் குறித்த நிகழ்வில் பரபரப்பு ஏற்ப்பட்டிருந்தது.
அதிகநேரம் வெயிலில் நின்றுக்கொண்டு இருந்தமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அவர்களுக்கு முதலுதவிசிகைச்சைகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது
24 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
27 Jan 2026