2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி ஒட்டுசுட்டான் சிவநகர் கிராமத்தில் யானை வேலிக்கு பொருத்தப்பட்டுள்ள சோலர் ஒன்றும், வீட்டில் இருந்த தண்ணீர் மோட்டர் ஒன்றும், மிதிவண்டி ஒன்றும் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 16ஆம் திகதி  பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில், முக்கிய குற்றவாளி கனகராயன் குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரிடம் இருந்து  களவாடப்பட்ட இரண்டு தண்ணீர் மோட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த களவுடன் தொடர்புடைய சிவநகர் பகுதியினை சேர்ந்த ஒருவரும், கனகராயன்குளம் பகுதியினை சேர்ந்த மேலும் ஒருவருமாக மூவரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் களவாடப்பட்ட சான்றுப் பொருட்களையும் சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X