2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பள்ளிக்குடாவில் இறங்குதுறை வேண்டும்

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடாவில் மீன்பிடி இறங்குதுறை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், நேற்று திங்கட்கிழமை (23) அங்கு சென்றார். இதன்போது, பள்ளிக்குடா பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், தங்கள் கிராமத்திலிருந்து பிரதான வீதியான ஏ - 32 வீதிக்குச் செல்வதற்காக பஸ் சேவையொன்றை நடத்துமாறும் இந்த மக்கள் கோரினர். பஸ் சேவை இல்லாததால் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கும், தங்களின் தேவைகளை நிறைவு செய்யச் செல்வதற்கும் சிரமமாக இருப்பதாக அம்மக்கள் கூறினர்.

இந்தக் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X