2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிமுனை காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மன்னார் - பள்ளிமுனை கிராமத்திலுள்ள 25 வீட்டுத்திட்ட மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுக்காப்பு அமைச்சுக்கு கடிதம் ஒன்று  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை(26) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனினால் அனுப்பிவைக்கப்பட்டது.

 1990 ஆம் ஆண்டு கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட பள்ளிமுனை மக்களின் 22 வீடுகளை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குமாறும் அந்த கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணிப்பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், பல தடவைகள் அந்த காணிகள் நில அளவை அதிகாரிகளினால் அளவீடு செய்யும் முயற்சிகள் இடம்பெற்றமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

காணி உரிமையாளர்களுக்குப் பாதுக்காப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு குறித்த பிரச்சினை தொடர்பாக தெரியப்படுத்திய நிலையில், காணிப்பிரச்சினை தொடர்பாக தாம் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார.;


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .