2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பழையமுறிகண்டியில் நாள்தோறும் மணல் அகழ்வு

Niroshini   / 2021 நவம்பர் 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - பழையமுறிகண்டி கிராமத்தில் நாள்தோறும் மணல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி சகுந்தலாதேவி தெரிவித்தார். 

 

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கடந்த பத்து ஆண்டுகளாக பழையமுறிகண்டி கிராமத்தில் இருந்து மணல் கொண்டு செல்லப்படுவதாக சாடினார்.

 

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர் உட்பட பல்வேறு தரப்புகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் உரிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

 

"ஆற்றுப்படுகைகளில் தொடர்கின்ற மணல் அகழ்வு பழையமுறிகண்டி குளத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் நிகழ்வதனால் குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்படலாம் என, மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். 

 

"நாள்தோறும் கிராமத்தில் இருந்து இரண்டு டிப்பர்களில் மணல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.  டிப்பர்கள் பயணிப்பதனால் கிராமத்தின் முதன்மை வீதி சேதமடைந்து காணப்படுகின்றது. இதனைவிட மணல் அகழ்வால் பெருமளவு மரங்கள் இக்கிராமத்தில் அழிக்கப்பட்டு வருகின்றது" எனவும், பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X