2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’பஸ் சேவைகளை அதிகரிக்கவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகரத்தில் இருந்து வற்றாப்பளை, கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு வழியாக பிற இடங்களுக்கான பஸ் சேவைகளை அதிகரிக்குமாறு வற்றாப்பளை, கேப்பாப்புலவு ஆகிய பகுதிகளின் பொது மக்கள் கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கேப்பாப்புலவு கிராம மக்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயம், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

பொது மக்கள் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை, முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு நகரம் ஆகியவற்றுக்கு செல்வதில் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரத்தில் இருந்து யாழ்ப்பாணம், வவுனியாவிற்கான ஓரிரு பஸ் சேவைகள் வற்றாப்பளை ஊடாக புதுக்குடியிருப்பு வழியாக நடைபெற்றாலும் பாடசாலை மாணவர்கள், பொது மக்களின் போக்குவரத்து நேரங்களினை கவனத்தில் கொள்வதில்லை.

மேற்படி வழித்தடத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை கூடுதலாக சேவையில் ஈடுபடுத்துமாறு, மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X