2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘பஸ் சேவைகளை நடத்துவதற்கு வீதிகளைப் புனரமைக்க வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு மாவட்டக் கிராமங்களுக்கான பஸ் சேவைகளை நடத்துவதற்கு, முதலில் முக்கிய வீதிகள் பலவற்றைப் புனரமைக்க வேண்டியுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த பத்தாண்டுகளில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல முக்கிய வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாகவே, கிராமங்களுக்கான பஸ் சேவைகளை நடத்துவதில் நெருக்கடிகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மாந்தை கிழக்குக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாததால், பல கிராமங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லையெனத் தெரிவித்த அவர், எனவே, துணுக்காய், மாந்தை கிழக்கு வீதிகள் புனரமைக்கப்பட்டு, பஸ் சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .