Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - தென்னியங்குளம் கிராமம் வழியாக கிளிநொச்சியின் முழங்காவில் வரையிலும் முல்லைத்தீவு துணுக்காய் வரையிலும் பஸ் சேவைகள் நடத்தப்பட வேண்டும் என தென்னியங்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னியங்குளம் கிராமத்தில் தற்போது 116 குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கிராமத்துக்கான பஸ் சேவைகள் நடைபெறுவதில்லை.
இந்நிலையில் முழங்காவில், துணுக்காயில் இருந்து பஸ் சேவைகளை தமது கிராமத்திற்கு நடத்துவதன் மூலம் கிராம வளர்ச்சி அடையும் எனவும் தமது விவசாய உற்பத்தி பொருள்கள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கும் இக்கிராம மக்கள், கிராமத்துக்கு பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக தென்னியங்குளம் கிராமத்தில் இருந்து கோட்டைக்கட்டியகுளம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
21 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
3 hours ago