2025 மே 23, வெள்ளிக்கிழமை

பாடசாலை வளாகத்துக்குள் யானைகளின் அட்டகாசம்

க. அகரன்   / 2019 ஜூன் 26 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா புதியவேலன் சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய  வளாகத்துக்குள் காட்டுயானைகளின் அட்டகாசம் காரணமாக  பயன்தரும் மரங்கள் பல சேதமடைந்துள்ளது.

வவுனியா விளக்குவைத்த குளம் கிராமவேவகர் பிரிவுக்குற்பட்ட புதியவேலன் சின்னக்குளம் கிராமம் காட்டுப்பகுதியை அன்டிய கிராமம் இக் கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் குடிமனைப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாயிகளின் பயிர்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் நேற்று இரவு குடிமனைபகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் புதியவேலன் சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வேலியை சேதப்படுத்திக்கொண்டு நுழைந்து வாழை, மா, பலா, உற்பட பல பயன்தரும் மரங்களைப் சேதமேற்படுத்தியுள்ளது.

இதேவேளை குடிமனைப்பகுதிகளிளும் விவசாயிகளின் பயிர்களையும் அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றது இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். எனவே குறித்த கிராமத்தை சுற்றி யானைவேலி அமைத்து தரும்படி புதியவேலன் சின்னக்குளம் கிராமமக்கள் சம்பந்தப்பட்ட தரப்பிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X