2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாணுக்குள் நூல்

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர், குறித்த பாணை வெட்டிய போது, அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம், இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று, சாப்பாட்டுக்காக குறித்த நபர் பாண் வாங்கியுள்ளார்.

வீட்டுக்குச் சென்று, அப்பாணை வெட்டிய போது, அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .