Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி - ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களாலும் பெற்றோராலும், இன்று (24) காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றுக் காலை 8 மணியளவில், பாடசாலையின் பிரதான வாயிலை மறித்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
புதன்கிழமையன்று (23), பாடசாலை மாணவன் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்கு வருமாறும், பாடசாலை ஒழுக்க விதிகளை பேணுமாறும் பாடசாலை அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அதிபரை தாக்க முற்பட்டுள்ளார்.
இதைத் தடுக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கானார்.
இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்தும், தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களைப் பாதுகாத்து தருமாறு கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி கோட்டக் கல்வி அதிகாரி தர்மரட்ணம், கிளிநொச்சி பொலிஸார், பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
19 minute ago
23 minute ago