2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பாதையில் உருண்டு நல்லிணக்கப் பயணம்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கையில் 71ஆவது தேசிய நாளையொட்டி, நாட்டிள்ள அனைவரும், இன, மத, பேதமின்றி சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென வலியுறுத்தி, தனிநபரொருவர், மன்னார் - தள்ளாடி பகுதியில் இருந்து அநுராதபுரம் வரை, இன்று (05) காலை, தரையில் உருண்டுச் செல்லும் நல்லிணக்கப் பயணமொன்றை  முன்னெடுத்தார்.

மன்னாரைச் சேர்ந்த அன்டன் கிருஷ்ணன் டயஸ் (வயது 38) என்பவரே, இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

மன்னாரில் ஆரம்பமான இந்தப் பயணம், எதிர்வரும் 40 நாள்களில், திருகேதீஸ்வரம், மடு ஊடாக அநுராதபுரத்தைச் அடையவுள்ளது. இவர், நாள் ஒன்றுக்கு, சுமார் 5 கிலோமீற்றர் தூரம், தரையில் உருண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .