Freelancer / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - கிழவன் குளம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை குற்றுயிராய் கிடந்த பாம்பினை கையினால் தூக்கிய போது, பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
இதையடுத்து, குறித்த நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) இரவு உயிரிழந்துள்ளார்.
மாங்குளம் - கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47)என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். R
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025